Saturday 23 May, 2009

அப்புறம்? வேற என்ன? ..எதுக்கு? ..சரி? ...நீ சொல்லு? ...சாப்டாச்சா? ...என்ன சாப்பாடு
இது தவிர மொக்கை போட தெரிஞ்சுகக் வேண்டிய வார்த்தைகள் ஏதுமில்ல...இது தெரிஞ்சா போதும்..கூடவே மொட்டை மாடீல ஒரு ஓரமா சின்ன இடம் கிடச்சா போதும்...அவங்கள குத்தி கொல பண்ண வந்தா கூட தெரியாத அளவுக்கு இந்த வார்த்தைகள் மட்டும் தான் பேசுவாங்க.... அது ஒரு கனா காலம்..
மொக்க போடறவுங்களுக்கு இது வேனும்னா ஒரு கனாக்காலமா இருக்கலாம்...ஆனா அதை கேட்குற நமக்கு அது ராகு காலம்...
இதுக்கு தமிழ்ல இன்னொரு அழகான பேரும் இருக்கு... அது கடலை போடுறது...ஒன்னுமே இல்லைனாலும் வறுத்த கடலைய மண்ணுல வறுப்பாங்க...அதே மாதிரி தான்..ஒன்னுமே இல்லாத விஷ்யத்தை நம் மக்கள் வறுத்து வறுத்து கருகி போனாலும் வறுதிக்கிட்டு இருப்பாங்க.. இது தான் நம் நாட்டின் கலாச்சாரம்....கள்ள சாராயம் கூட....கிக்கா இருக்கும்..
மொக்கை போடுறது ஒரு தனி கலை, அதாவது நிறைய பொண்ணுகளை பசங்களை டீல் பண்ணனும் ...அதுவும் ஒரே சமயத்துல) தெரியாதவுங்களுக்கு பல்ப் தான் மிஞ்சும்...என்ன தான் மொக்கை போடுறது ஒரு கிலுகிலுப்பன மேட்டரா இருந்தாலும் அது மத்தவங்கள எவ்வளோ பாதிக்குதுன்னு பார்த்தா கண்ணுல இரத்தம் வரும்.
இதுல முதல் அடி வாங்குறது அப்பாவி அப்பாக்கள் தான்....பாவம் காலேஜ் போற பையனுக்கு ரீசார்ஜ் பண்ணி குடுத்தே பாதி பணம் போயிடும்...பட் இங்க தான் இரு டிவிஸ்ட் இருக்கு...பசங்களோட அப்பா மட்டும் தான் பாவம்...பொண்ணுகளோட அப்பா இதுல சேர்த்தி இல்ல...நமக்கு தான் தெரியுமே பொண்ணுகளுக்கு இன்னொரு பேரு மிஸ்கால்..ஹி ஹி ஹிகடலை போடுறது பத்தி நான் பேசியே ஆகனும்...இந்த கடல போடுறத கண்டுபிடுச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா என் கையில தான் சங்கு...
எரியற நெருப்பில எண்ணெய் ஊத்தற மாதிரி 2 நம்பர்க்கு ஃப்ரீ அக்சஸ் குடுத்துட்டு போய்ட்டாங்க..நமக்கு அந்த வாய்ப்பு இல்லாம இருக்கேனு ஆல்ரெடி ஃபீலிங்கல இருந்தா..நம்மல உசுப்பு ஏத்தவே சில பேரு வருவாங்க..ஹ்ம்ம்ம்.எனக்கு ஆபீஸ் டைடல்ல பார்க்ல இருக்கு இருந்துச்சு...காலையில அவசர அவசரமா பஸ்ஸ பிடிச்சு நிக்க இடம் இல்லாம ஹண்ட் பேக், லுஞ்ச் பேக்.. அப்புறம் கம்பியயும் பிடிசிட்டு இருப்பேன்.. அபப் தான் நம்ம ஊரு காலேஜ் பசங்க பாட்டு..கூத்துன்னு டெரரா ட்ராவல் பண்ணுவாங்க..அந்த கேப்ப கூட வேஸ்ட் பண்ணாம என் பக்கத்துல ஒரு காலேஜ் பொண்ணூ நிக்கவே இடம் இல்லாத நேரத்துல கூட, சும்மா பறக்குற மாதிரி மொக்கை போடுகிட்டு இருந்துச்சு..ஃபோன்ல பேசுனா பரவாயில்லை...என் காதுல தானே பேடீட்டு இருக்கு..வெந்த புன்னுல வேல பாய்ச்சுன மாதிரி..சரி எனக்கும் ஒரு வசந்த காலம் வராதானு நினச்சுட்டே என் ஸ்டாப்பிங்க்ல இறங்கிட்டேன்..வாழ்க கடலை..வாழ்க மொக்கை..எல்லாரும் ஃபோன்ல பேசீட்டு இருங்க...எல்லார் காதும் செவிடாகட்டும்Why blood,, same blood hehehehe….

Monday 6 April, 2009

மாமியார் மருமக :-))

இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா எல்லாருக்கும் என்ன தோணுது?? சர்க்கஸ்? கச்சேரி ? போலீஸ் ஸ்டேஷன்? திருவிழா? ஜூ? பேய் ? பிசாசு? பூதம்? குட்டி சாத்தான் ? ம்ம்,,,,இப்போ தமிழ் நாட்டுல நடக்கிற பல காமெடி சமாச்சாரத்துல முதன்மை இடத்தை நிலை நாட்டி கொண்டிருகின்றது இந்த உறவு தாங்க,,,, மாமியார் மருமகள புகழ்ந்து பேசுறதும் ,, மருமக மாமியார புகழ்ந்து பேசறத கேக்க ஆயிரம் காதுகள் ..வேணும் . இவங்க இரெண்டு பேரும் விளையாடாத விளையாட்டு இல்லங்க ,,,,கபடி , கைபந்து , கால் பந்து , முத்திரை போட்டி , எல்லாம்ம்ம்ம்ம் ,,,,,


பெரியவங்க சொன்னாங்க மருமக மாமியார தாயா பாக்கணும்,,, நம்ம மருமக ஒரு படி மேல போய் பேயா பாக்க ஆரம்பிச்சிட்டாங்க ,,, மாமியார் ,, இன்னும் நல்லவங்க ,, மகளா பாக்க சொன்னா? பாகிஸ்தான் தீவிர வாதிய பாக்கற மாதிரி பாக்கறாங்க ,,,,,, அதெல்லாம் இருக்கட்டும் விளையாட்டுல ரொம்ப சந்தோஷம் அடைந்தவர்களை கேட்டேன் , எல்லாம் நம் நண்பர்கள் தான் ,,இவங்க ரெண்டு பேர் பத்தி நினைச்சா என்ன தோணுது?

தோழன் தோழியின் உண்மை வாக்கு மூலம்!

தோழன்ஒன்று : நான் அழுதுருவேன் ( பாவம் இவரு எத்தன நாள் கண்ணீர் சிந்தினாரோ ,,, ஹி ஹி )


தோழன்இரண்டு : எனக்கு தலைல சொட்ட தங்கச்சி ( அவங்க சண்டைல இவரு தலைய பிச்சிகிட்டாறு போல ஹோ ஹோ )


தோழன்மூன்று : ஏன் மனைவி ரொம்ப நல்லவ,, எங்க அம்மா அதுக்கும் மேல ,,,( ஒரே காமெடி )

மருமக ஒன்று : அவ தலையில இடி விழ ,,,, ( பாவம், அவங்க மாமியார பத்தி கேட்டா வேலைக்காரி பத்தி சொல்லிட்டாங்க போல )

மருமக இரண்டு : அவங்க எங்க அம்மா மாதிரி ( அடுத்த நொடி நான் அழுதுட்டேன் )

மாமியார் :என் புள்ளைய மயக்கிட்டா பாவி பொண்ணு ( பில்லி ,, சூனியம் எபிபிச்ட் )

மாமியார்: ,,, வாயாடி மங்கம்மா ,,, தெரியாம என் பையனுக்கு கட்டிவைச்சிட்டேன் ,,இவள வெட்டி விட்டு வேற பொண்ண கட்டி வைக்கபோறேன் என் பையனுக்கு (ஈ. பி .கோ காங்பிர்மேது )

தோழன் : என் சோக கதைய கேளுன்னு ( பாட ஆரம்பிச்சிட்டாரு )


தோழன் : பிறவி ஒன்று இருந்தால் இவர்கள் இரெண்டு பேரும் இல்லாத இடத்தில் பிறத்தல் வேணும் ( ரொம்ப பாவம் )


இதுல ஸ்பெஷல் என்னன்னா ,,, மாமியார் மருமக சண்டைல ரொம்ப பாவத்துக்கு உரிய ஜீவன் யாருன்னா? , நடுவுல மாட்டிக்கிட்டு திக்கு தெச தெரியாம ரெண்டு பக்கமும் இடி வாங்கறது அந்த அப்பாவி கணவன் தான் ,,, இதுல முக்கியமான விஷயம் என்னனா ,, இவங்க ரெண்டு பேருக்கும் பாசத்துல தான் பிரச்சனையே வரும் :-) ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,,, இந்த சண்டைகள் ஒரு சுகமான சங்கீதம் ,, இதுல சில சமயம் வீணை சத்தம் கேட்கும், சில சமயம் நாதஸ்வரம் , சில சமயம் மத்தளம் , பல சமயம் ட்ரும்ஸ் தான் ,,,, இந்த தப்பு தாளங்களை வரிசை படுத்தி இசைத்தால் வரும் கீதம் குழலினும் இனிமையானது,,, இசைத்து பாருங்க ,,,,
இருந்தாலும், என்ன தான் பாட ட்ரை செஞ்சாலும் ,,, வராத இசை ......டப்பாங்குத்துதான் ,, சும்மா பிச்சிகினு போகும்ல ;-))) டான் டா நக்க டா நா கூ நா கா தான் ;-)))))) ஹா ஹா ஹா இதுவும் இசை தான் :-)



மாஞ்சா

வீணா

Friday 3 April, 2009

அல்லாரிப்பு


''அல்லாரிப்பு'' என்பது மலரின் மொட்டு! இனிமையான தொடக்கம். கண்களில் தொடங்கி, பல திசைகளிலும் இசையின் வாயிலாக, சிரிப்பின் சிதறலாய் , என் நண்பர்களின் வெற்றி பயணத்தில், உடன் போக விரும்பும் இந்த மொட்டு!!

மாஞ்சா! மாஞ்சா !! பேர கேட்டவுடன சும்மா சிரிப்பு வருதுல்ல ? வரனும் அப்டி வரலைனாலும், சிரிங்க ப்ளீஸ் ! மகிழ்ச்சியான, அறுக்கவே முடியாத மாஞ்சா போட்ட பதிவுடன் வந்து இம்சை பண்ணுவேன் விரைவில்!!

அன்புடன் ,

வீணா!