Saturday, 23 May, 2009

அப்புறம்? வேற என்ன? ..எதுக்கு? ..சரி? ...நீ சொல்லு? ...சாப்டாச்சா? ...என்ன சாப்பாடு
இது தவிர மொக்கை போட தெரிஞ்சுகக் வேண்டிய வார்த்தைகள் ஏதுமில்ல...இது தெரிஞ்சா போதும்..கூடவே மொட்டை மாடீல ஒரு ஓரமா சின்ன இடம் கிடச்சா போதும்...அவங்கள குத்தி கொல பண்ண வந்தா கூட தெரியாத அளவுக்கு இந்த வார்த்தைகள் மட்டும் தான் பேசுவாங்க.... அது ஒரு கனா காலம்..
மொக்க போடறவுங்களுக்கு இது வேனும்னா ஒரு கனாக்காலமா இருக்கலாம்...ஆனா அதை கேட்குற நமக்கு அது ராகு காலம்...
இதுக்கு தமிழ்ல இன்னொரு அழகான பேரும் இருக்கு... அது கடலை போடுறது...ஒன்னுமே இல்லைனாலும் வறுத்த கடலைய மண்ணுல வறுப்பாங்க...அதே மாதிரி தான்..ஒன்னுமே இல்லாத விஷ்யத்தை நம் மக்கள் வறுத்து வறுத்து கருகி போனாலும் வறுதிக்கிட்டு இருப்பாங்க.. இது தான் நம் நாட்டின் கலாச்சாரம்....கள்ள சாராயம் கூட....கிக்கா இருக்கும்..
மொக்கை போடுறது ஒரு தனி கலை, அதாவது நிறைய பொண்ணுகளை பசங்களை டீல் பண்ணனும் ...அதுவும் ஒரே சமயத்துல) தெரியாதவுங்களுக்கு பல்ப் தான் மிஞ்சும்...என்ன தான் மொக்கை போடுறது ஒரு கிலுகிலுப்பன மேட்டரா இருந்தாலும் அது மத்தவங்கள எவ்வளோ பாதிக்குதுன்னு பார்த்தா கண்ணுல இரத்தம் வரும்.
இதுல முதல் அடி வாங்குறது அப்பாவி அப்பாக்கள் தான்....பாவம் காலேஜ் போற பையனுக்கு ரீசார்ஜ் பண்ணி குடுத்தே பாதி பணம் போயிடும்...பட் இங்க தான் இரு டிவிஸ்ட் இருக்கு...பசங்களோட அப்பா மட்டும் தான் பாவம்...பொண்ணுகளோட அப்பா இதுல சேர்த்தி இல்ல...நமக்கு தான் தெரியுமே பொண்ணுகளுக்கு இன்னொரு பேரு மிஸ்கால்..ஹி ஹி ஹிகடலை போடுறது பத்தி நான் பேசியே ஆகனும்...இந்த கடல போடுறத கண்டுபிடுச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா என் கையில தான் சங்கு...
எரியற நெருப்பில எண்ணெய் ஊத்தற மாதிரி 2 நம்பர்க்கு ஃப்ரீ அக்சஸ் குடுத்துட்டு போய்ட்டாங்க..நமக்கு அந்த வாய்ப்பு இல்லாம இருக்கேனு ஆல்ரெடி ஃபீலிங்கல இருந்தா..நம்மல உசுப்பு ஏத்தவே சில பேரு வருவாங்க..ஹ்ம்ம்ம்.எனக்கு ஆபீஸ் டைடல்ல பார்க்ல இருக்கு இருந்துச்சு...காலையில அவசர அவசரமா பஸ்ஸ பிடிச்சு நிக்க இடம் இல்லாம ஹண்ட் பேக், லுஞ்ச் பேக்.. அப்புறம் கம்பியயும் பிடிசிட்டு இருப்பேன்.. அபப் தான் நம்ம ஊரு காலேஜ் பசங்க பாட்டு..கூத்துன்னு டெரரா ட்ராவல் பண்ணுவாங்க..அந்த கேப்ப கூட வேஸ்ட் பண்ணாம என் பக்கத்துல ஒரு காலேஜ் பொண்ணூ நிக்கவே இடம் இல்லாத நேரத்துல கூட, சும்மா பறக்குற மாதிரி மொக்கை போடுகிட்டு இருந்துச்சு..ஃபோன்ல பேசுனா பரவாயில்லை...என் காதுல தானே பேடீட்டு இருக்கு..வெந்த புன்னுல வேல பாய்ச்சுன மாதிரி..சரி எனக்கும் ஒரு வசந்த காலம் வராதானு நினச்சுட்டே என் ஸ்டாப்பிங்க்ல இறங்கிட்டேன்..வாழ்க கடலை..வாழ்க மொக்கை..எல்லாரும் ஃபோன்ல பேசீட்டு இருங்க...எல்லார் காதும் செவிடாகட்டும்Why blood,, same blood hehehehe….

1 comment:

 1. அப்புறம்? வேற என்ன? ..எதுக்கு? ..சரி? ...நீ சொல்லு? ...சாப்டாச்சா? ...என்ன சாப்பாடு?
  எங்க இருக்க ?
  என்ன செய்ற ?
  காலைல என்ன சாப்ட்ட ?
  லஞ்ச்kகு என்ன தொட்டுக்க ?
  என்ன போன் பிஸி யா இருந்துது ?
  செல்லுல சார்ஜ் இருக்கா ?
  எனக்கு தூக்கமே வரல ?
  என்ன சீக்கிரமா தூங்க போற (மணி 12.45pm )
  சரி காலைல கால் பன்னி எழுப்பு ?
  அமாம் ,இல்ல , ஒரே போரா இருக்கு
  ஓகே .....ம்ம்ம் ...ம்ம் ம....(இடை இடையே ok.bye இன்னு சொல்லணும் )

  ReplyDelete